தாண்டவம்

தகிட தகிட தகிட

தாளத்தில் அவன் ஆடக் கண்டேன்

திமிகிட திமிகிட திமிகிட

நாதத்தில் அவன் ஆடக் கண்டேன்

ஊர் மூலையில் ஓர் காட்டில்

இந்த நாட்டியம் கண்டு

காதல் என்னும் தீயில் விழுந்து

நான் எறிந்து நின்றேன்;

காமனை எறித்தான் என்று ஊரில் பேச்சு

என் மனதை எறித்தான் என்ற செய்தி கேட்பாயோ நீ?

அழகில்லை அவனிடம், வெரும் வேகம் மட்டும்;

குணமில்லை அவனிடம், வெரும் நெருப்பு மட்டும்;

அவன் என்னை பார்க்கவில்லை

நான் அவனை மறக்கவில்லை;

தாண்டவமாம் தாண்டவம்-

அவனுக்கு என்ன தெரியும்

என் மனதின் நடனம்?

புலித் தோலும் உடுக்கையும் என் ஆசையை மறைக்குமோ?

போ, வரச்சொல் என் கண்ணெதிரே

கதறி அழுவான் என் முன்னால்

அன்பே, என் உயிரின் துடிப்பு நீ என்று;

அன்று நான் அவனை மறந்து

என் நாட்டியத்தைத் தொடர்வேன்..

Advertisements

3 thoughts on “தாண்டவம்

  1. oh my, this is so very beautiful! these lines – அவன் என்னை பார்க்கவில்லை

    நான் அவனை மறக்கவில்லை; – WOW!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s