Red earth and pouring rain

In search of myself

ஆசை April 18, 2009

Filed under: தமிழ் — Summer Rain @ 5:02 pm

இன்று என்னுள் ஓர் ஆசை

புயலின் வேகம் கொண்டு செல்ல

அனலின் சிவப்பை பகிர்ந்து கொள்ள

மலரின் தேனை குடித்துச் செல்ல

பூமியின் வண்ணம் பூசிக் கொள்ள

 

இன்று என்னுள் ஓர் ஆசை

அச்சமின்றி போர் செய்ய

கூச்சமின்றி காதல் செய்ய

வெட்கமின்றி மெய் பேச

தூக்கமின்றி வினை செய்ய

 

இன்று என்னுள் ஓர் ஆசை

பாதை மாறி நடந்து போக

முறைகள் சாத்திரம் நீங்கிப் போக

தோற்றமில்லா அகம் வளர்க்க

ஆம்! நானும் ஒரு பெண் தான்…